"ஆளுநர் குறித்து அவையில் பேச வேண்டாம்" - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வேண்டுகோள்

ஆளுநர் பற்றி அவையில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
"ஆளுநர் குறித்து அவையில் பேச வேண்டாம்" - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் வேண்டுகோள்
Published on

ஆளுநர் ஆய்வு நடத்திய விவகாரத்தில் தமிழக அரசின் நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆளுநருடைய கடந்த கால நடவடிக்கைகள் குறித்து பேச அனுமதிக்க கோரினார். அதற்கு சபாநாயகர் தனபால் அனுமதி மறுத்தார். இருப்பினும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடர்ந்து வற்புறுத்தியதை அடுத்து சபாநாயகர் அனுமதி அளித்தார். அப்போது குறுக்கிட்ட , துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஆளுநர் பற்றி அவையில் பேச வேண்டாம் என சபாநாயகர் கூறியதை நினைவு படுத்தினார். அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஆளுநர் குறித்து பேசுவதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com