"1500 மருத்துவர்கள், 4000 செவிலியர்கள் விரைவில் நியமனம்" - விஜய பாஸ்கர்

சுகாதாரத் துறையில் 108 புதிய அறிவிப்புகள் மூலம் மருத்துவமனைகளும், மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டிருப்பதாக கூறினார் - விஜய பாஸ்கர்
"1500 மருத்துவர்கள், 4000 செவிலியர்கள் விரைவில் நியமனம்" - விஜய பாஸ்கர்
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வட்ட மருத்துவமனையில் அவசியம் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சூளகிரியிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவுக்குள்ளாக ஒசூர் வட்ட மருத்துவமனை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவமனை செயல்பட்டு வருவதாக கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத் துறையில் 108 புதிய அறிவிப்புகள் மூலம் மருத்துவமனைகளும், மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டிருப்பதாக கூறினார். மேலும், மருத்துவர்கள் பற்றாக்குறை என்ற சூழலே இல்லை எனவும் விரைவில் ஆயிரத்து ஐநூறு மருத்துவர்களும், 4 ஆயிரம் செவிலியர்களும் பணியமர்த்தப்பட உள்ளதாகவும் பேரவையில் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com