"பேரவைக்கு காவி உடையில் வந்தவர் கருணாநிதி.." அதிமுக அட்டாக்!
காஞ்சிபுரத்தில் ஏகாம்பரநாதர் கோவில் அருகே அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் பிரம்மாண்ட கோடைகால தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், முந்தைய காலத்தில் சட்டப்பேரவைக்கு காவி உடை அணிந்து வந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி எனத்தெரிவித்தார். எனவே அதிமுகவினர் குறித்து முதல்வர் விமர்சிக்க எந்த உரிமையும் இல்லை எனவும், திமுகவினரின் இரட்டை வேடத்தை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
Next Story
