Dharmapuri || கன்னடத்தில் பேசி கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த விஜய பிரபாகரன்

கன்னடத்தில் பேசி கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த விஜய பிரபாகரன்

Dharmapuri || கன்னடத்தில் பேசி கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்த விஜய பிரபாகரன் ஒகேனக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தேமுதிக இளைஞரணித் தலைவர் விஜய பிரபாகரன், கன்னடத்தில் பேசி கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, ஒகேனக்கல்லில் தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய விஜய் பிரபாகரன், "ஈ சாலாக் காவேரி நம்து" என கன்னட மொழியில் பேசி கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும், காவிரி நீரைப் பெற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்..

X

Thanthi TV
www.thanthitv.com