Dharmapuri || மேகதாது அணைக்கு எதிர்ப்பு - ஒகேனக்கல்லில் தேமுதிக ஆர்ப்பாட்டம்

மேகதாது அணைக்கு எதிர்ப்பு - ஒகேனக்கல்லில் தேமுதிக ஆர்ப்பாட்டம்

Dharmapuri || மேகதாது அணைக்கு எதிர்ப்பு - ஒகேனக்கல்லில் தேமுதிக ஆர்ப்பாட்டம் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிப்பதை கண்டித்து, தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், விஜய பிரபாகரன், எம்.பி. சுதீஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். முன்னதாக, தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீரை பிரேமலதா வணங்கினார். காவிரி தமிழகத்தின் குடிநீர் ஆதாரமாகவும், டெல்டா விவசாயிகளின் உயிர்நாடியாகவும் விளங்குவதால், நீரை தடுக்கும் கர்நாடக அரசின் முயற்சியை தேமுதிக வன்மையாக கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com