டெல்லியில் அதிமுகவின் புதிய அலுவலகம் - சென்னையில் இருந்து திறந்து வைத்தார் ஈபிஎஸ்
டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இருந்து காணொளி வாயிலாக திறந்து வைத்தார். புஷ்ப விஹார், எம்பி சாலையில் 10 கோடி மதிப்பீட்டில் 4 தளங்களுடன் 13 ஆயிரம் சதுர அடிக்கு பல்வேறு நவீன வசதிகளுடன் புதிய அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. புதிய அலுவலகத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் - புரட்சித் தலைவி அம்மா மாளிகை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தது மகிழ்ச்சியாக இருப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
Next Story