Councillors | Mayor | Kovai | மேயர் முன் கவுன்சிலர்கள் மோதல்.. கோவை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
மேயர் முன் கவுன்சிலர்கள் மோதல்.. கோவை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு
கோவை மாநகராட்சி கூட்டத்தில், 143 தீர்மானங்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டதை கண்டித்து, அதிமுக கவுன்சிலர்கள் குரல் எழுப்பியதால், உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கோவை மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டதும், அதிமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு பதிலளித்த திமுக கூட்டணி கவுன்சிலர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், கூட்ட அரங்கில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து, அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன் உள்ளிட்ட 3 பேர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர். தீர்மானங்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டதாக குற்றம்சாட்டிய அதிமுக கவுன்சிலர்கள், மாநகராட்சியில் வெளிப்படைத்தன்மை இல்லை என குற்றம்சாட்டினர்.
