CM Vijay Speech | ``மக்கள் நலனே முக்கியம்..’’ | கோட்டையில் கர்ஜித்த CM விஜய்
CM Vijay Speech | ``மக்கள் நலனே முக்கியம்..’’ | கோட்டையில் கர்ஜித்த CM விஜய்
"மக்கள் நலனுக்கு எதிரான செயல்பாடுகளை அரசு எதிர்க்கும்" நாட்டின் 80 வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் விஜய் முதல்முறையாக தேசியக்கொடி ஏற்றினார்... தேசிய கீதம் ஒலிக்க பிரம்மாண்ட கம்பத்தில் கொடியேற்றிய முதல்வர் விஜய், ராயல் சல்யூட் அடித்து மரியாதை அளித்தார் வெளிப்படையாகவும், பொதுவாழ்வில் எந்தச் சமரசமும் இன்றியும் மக்கள் நலனை மட்டுமே முதன்மையாகக் கொண்டு அரசு இயங்குவதாக முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார்... மக்கள் நலன் தான் மிக மிக முக்கியம் என்பதன் அடிப்படையில் தமிழக அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.. தமிழ்நாட்டின் நலனுக்கும் கொள்கைக்கும் எதிரான விஷயங்களை அரசு நிச்சயம் எதிர்த்து நிற்கும் என்று முதலமைச்சர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்... மக்களுக்காக நிர்வாக ரீதியாக மத்திய அரசோடு ஒத்துழைத்துச் செல்வோம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்...
