CM Vijay | Kanimozhi Santhosh | சர்ப்ரைஸ் கொடுத்த CM விஜய்.. நன்றி சொன்ன கனிமொழி சந்தோஷ்

சர்ப்ரைஸ் கொடுத்த CM விஜய்.. நன்றி சொன்ன கனிமொழி சந்தோஷ்

தொகுதி மக்களின் மருத்துவத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்திட முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.. தமிழ்நாடு அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், 2026-27ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில் கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதி மக்களின் நலனுக்காக 3 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பில் 7 புதிய சுகாதாரத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தொகுதிக்குட்பட்ட 14 மருத்துவ நிறுவனங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பயன்பெறுகின்றன. குறிப்பாக, விளாங்குறிச்சி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சமுதாய சுகாதார மையமாகத் தரம் உயர்த்தப்படுவதோடு, துடியலூர் மற்றும் எஸ்.எஸ்.குளம் நிலையங்களுக்கு உயர்சிகிச்சை உபகரணங்களும் வழங்கப்பட உள்ளன. மேலும், பழங்குடியின மக்களுக்கான நடமாடும் மருத்துவ சேவை மற்றும் யோகா மருத்துவ மையங்களும் அமைக்கப்படவுள்ளன. மக்களின் நல்வாழ்வை மையமாகக் கொண்டு இந்தத் திட்டங்களை வழங்கிய முதலமைச்சர் விஜய் அவர்களுக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் அவர்களுக்கும் கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com