

திரையுலக சூப்பர் ஸ்டாரும், அருமை நண்பருமான ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று தனது 68 வது பிறந்த நாளை கொண்டாடும் நண்பர் சூப்பர் ஸ்டார் திரு @rajinikanth அவர்களுக்கு எனது உளங்கனிந்த வாழ்த்துகள். அவரது நீடித்த ஆயுள் ஆரோக்கியத்திற்கு எல்லாம் வல்ல அன்னை சக்தியை பிரார்த்திக்கின்றேன்.
எப்போதும் பரபரப்பான மனிதராக வலம் வரும் ரஜினியை வாழ்த்திக் கொள்வதாக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் குறிப்பிட்டுள்ளார்.
T 3023 - Happy birthday Rajni .. Dec 12 th .. friend colleague and a sensation ever !!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் pic.twitter.com/nE8iQxg14u
பல ஆண்டுகால நண்பரும், சக மாணவருமான சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்வதாக பதிவிட்டுள்ள கமல், நட்பும், வெற்றிகளும் தொடரட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
என் பல ஆண்டு நண்பர், சக மாணவர், சூப்பர் ஸ்டாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நம் நட்பும், வெற்றிகளும் தொடரட்டும்.