காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் நடைபெற்ற முழு அடைப்பு 100 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக ஸ்டாலின் தெரிவித்தார். வரும் 7ம் தேதி திருச்சி முக்கொம்பில் இருந்து கடலூர் நோக்கி காவிரி உரிமை மீட்பு பயணம் நடைபெறும் என்றும் இதில் தோழமைக் கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.