ஜாதி, மத ஒழிப்பு நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் பாராட்டுக்குரியவர்கள் - கமல்.

ஜாதி, மத ஒழிப்பு நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
ஜாதி, மத ஒழிப்பு நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் பாராட்டுக்குரியவர்கள் - கமல்.
Published on

ஜாதி, மத ஒழிப்பு நடவடிக்கையில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் பாராட்டுக்குரியவர்கள் என, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, தனது சமூக வலைதள பக்கத்தில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கமல்ஹாசன் பதிலளித்துள்ளார். தனது இரண்டு மகள்களையும் பள்ளியில் சேர்க்கும்போது விண்ணப்பத்தில் ஜாதி, மதத்தை குறிப்பிட மறுத்ததாக தெரிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் தான் அடுத்த தலைமுறைக்கு உதவும் என்றும், ஒவ்வொருவரும் இந்தச் செயல்களில் இறங்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார். கேரள மாநிலம் இதனைச் செயல்படுத்த தொடங்கி இருப்பதாகவும், இதுபோன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் பாராட்டுக்குரியவர்கள் என்றும் கமல் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com