"பாஜக கூட்டணியை ஏற்க முடியாது" - அதிமுக நிர்வாகி ராஜினாமாவால் பரபரப்பு
அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக, 35 ஆண்டுகளாக கட்சி பணியாற்றி வந்த அதிமுக நிர்வாகி, மாவட்ட செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். நெல்லை மாநகர் மாவட்ட அதிமுகவின் 20-வது வட்டக் கழக செயலாளராக இருந்த அமீர் அனுப்பிய கடிதத்தில், அதிமுக - பாஜக கூட்டணியை ஏற்க முடியாது எனவும், தன்னால் கூட்டணிக்கு பணியாற்ற முடியாது எனவும் குறிப்பிட்டு ராஜினாமா செய்துள்ளார்.
Next Story
