BJP vs TMC | வெடித்த பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் மோதல் - பற்றி எரிந்த கொல்கத்தா நகரம்
கொல்கத்தாவில் திரிணாமூல் காங்.- பாஜக இடையே மோதல்
கொல்கத்தாவில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் பாஜகவுக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் பொது சொத்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன், மேசைகள் உடைக்கப்பட்டு அந்த பகுதியே போர்க்களம் போல காட்சி அளித்தது. மேற்கு வங்கத்தில் இன்னும் மூன்று மாதத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதே போல பாஜகவும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் செயல்பட்டு வருவதால், அம்மாநில அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி இருக்கிறது.
Next Story
