பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில் புதுச்சேரி பாஜகவினர் யாகம் நடத்தி சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர்.மோடி இரண்டாவது முறையாக மீண்டும் நாட்டின் பிரதமாக வேண்டி புதுச்சேரி மாநில பாஜகவினர் தனியார் மண்டபத்தில் சிறப்பு யாகம் நடத்தினர். யாகத்தில் ஈடுபட்டு பாஜகவினர் பிரதமர் மோடியின் படத்தை வைத்து பூஜை கொடுத்தனர். இதில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.