திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக பாஜக வேட்பாளர் வி.வி.ராஜேஷ் தேர்வு

x

திருவனந்தபுரம் மாநகராட்சி மேயராக பாஜக வேட்பாளர் வி.வி.ராஜேஷ் தேர்வு

கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியின் மேயராக பாஜக-வை சேர்ந்த வி.வி. ராஜேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

கேரள அரசியல் வரலாற்றில் முதல் முறையாக பாஜக-வை சேர்ந்த ஒருவர் மேயராக தேர்வாகி இருக்கிறார்

கேரளாவில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றி இருந்தது

101 வார்டுகள் கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக 50 வார்டுகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது

சுயேட்சையாக போட்டியிட்டு கவுன்சிலரான ஒருவர் பாஜக மேயர் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்

100 உறுப்பினர்களை கொண்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில், 51 உறுப்பினர்களின் ஆதரவோடு பாஜக வேட்பாளர் வி.வி. ராஜேஷ் மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 4 தசாப்தங்களாக கம்யூனிஸ்ட் வசமிருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கைப்பற்றி இருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்