BJP | பாஜக நிர்வாகியிடம் ரூ.18 லட்சம் சைபர் கிரைம் மோசடி
ஓசூரை சேர்ந்த பாஜக நிர்வாகியிடம் 18 லட்ச ரூபாய் சைபர் கிரைம் மோசடி நடந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த நாகராஜ், பாஜகவில் மாநில வர்த்தக பிரிவு இணை அமைப்பாளராக உள்ளார். கடந்த 9ம் தேதி நாகராஜ் வாட்ஸ் அப் எண்ணிற்கு வந்த பிஎம் யோஜனா செயலியை ஓபன் செய்ததும் வங்கி கணக்கை ஹேக் செய்து 18 லட்ச ரூபாய் திருடியுள்ளனர். இதனையடுத்து வங்கி நிர்வாகத்திடம் நாகராஜ் அளித்த புகாரில் 10 லட்ச ரூபாய் மட்டும் திரும்ப பெறப்பட்டுள்ளது.
Next Story
