மத நல்லிணக்கம் சீர்குலைய வழிவகுத்துவிடாமல், எதிர்காலத்தில் சமூக அமைதியை நிலைநாட்டும் கடமை அனைத்துத் தரப்பினருக்கும் இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுபான்மை மக்களுக்கு அரணாக நாட்டின் பெரும்பான்மையான மக்கள் இருப்பதை கடந்தகால வரலாறு காட்டுவதாக கூறியுள்ளார். மதங்களைக் கடந்த மனிதநேய உணர்வு இந்த மண்ணில் கலந்து இருப்பதாகவும் வைகோ கூறியுள்ளார்.