"தேசிய கல்விக் கொள்கையை திணிக்கக் கூடாது" - அன்புமணி ராமதாஸ் கண்டனம்

x

தேசியக் கல்விக் கொள்கையை மத்திய அரசு திணிக்கக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்மொழிக் கொள்கையை திணிப்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது என்பதைத்தான் மத்திய கல்வியமைச்சரின் கருத்து வெளிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு நிதி ஒதுக்காததால், பல திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் இருப்பதால், நியாயத்தையும், மாநில அரசின் உரிமைகளையும் மதித்து ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்