வெளியான அன்புமணி ராமதாஸ் அறிக்கை..

x

துணைவேந்தர் இல்லாததால், சென்னைப் பல்கலைக்கழகம் செயலிழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 21 மாதங்களாக துணைவேந்தர் நியமிக்கப்படாததால் கல்வி, நிர்வாக நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பட்டமளிப்பு விழா தாமதம், முனைவர் பட்ட சான்றிதழ்கள் விநியோகிக்கப்படாததது, கணினி ஆய்வக திட்டம் நிறைவேறாதது போன்ற பல சிக்கல்கள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், உடனடியாக தமிழகத்தில் காலியாக உள்ள 9 பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.,


Next Story

மேலும் செய்திகள்