அலட்சியம் காட்டி வரும் அதிமுக அரசு... பட்டாசு ஆலை விபத்து - ஸ்டாலின் சாடல்

பட்டாசு தொழிற்சாலைகளில் அப்பாவி உயிர்கள் இறப்பதை தடுக்க, உடனடியாக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தமிழக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அலட்சியம் காட்டி வரும் அதிமுக அரசு... பட்டாசு ஆலை விபத்து - ஸ்டாலின் சாடல்
Published on

பட்டாசு தொழிற்சாலைகளில் அப்பாவி உயிர்கள் இறப்பதை தடுக்க, உடனடியாக உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என தமிழக அரசை திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், உயிரிழந்தவர்களுக்கு போதிய நிவாரண உதவியை வழங்க வேண்டும் எனவும், படுகாயமடைந்தவர்களை உயர்தர சிகிச்சை அளித்து காப்பாற்றிட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டு கொண்டுள்ளார். பட்டாசு தொழிற்சாலைகளில் வெடி விபத்துக்கள் என்பது அதிமுக ஆட்சியில் சர்வ சாதாரணமாகிவிட்டதாக குற்றம்சாட்டினார்.

X

Thanthi TV
www.thanthitv.com