அதிமுக போட்ட திட்டம் - இன்று என்ன நடக்கும் பேரவையில்?
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதம் இன்று தொடங்குகிறது. 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலையை அறிக்கையை கடந்த மார்ச்.14-ல் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டிற்கான பொது விவாதம் இன்று நடைபெறவுள்ளது. மேலும், அதிமுக சார்பில் சபாநாயகர் மீது கொடுக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானமும் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதைத்தொடர்ந்து கேள்வி நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர்.
Next Story
