பிரசாரத்தில் பெண் கேட்ட நறுக் கேள்வி... ஒருநொடி ஷாக்காகி வளர்மதி கொடுத்த ரியாக்ஷன்
காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி திருப்போரூரில் நடந்தே சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இள்ளலூர் கூட்ரோடு சந்திப்பில் ஓஎம்ஆர் சாலை ஓரத்தில் போடப்பட்டுள்ள ஏராளமான காய்கறி, கீரை கடைகளுக்குச் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது காய்கறி விற்பனை செய்யும் பெண் ஒருவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இல்லாத நிலையில், அவர் பெயரைக் கூறி ஓட்டு கேட்பதாகக் கூற, அவர் இல்லையென்றாலும் மக்களின் கோரிக்கைகளை அதிமுக நிறைவேற்றும் எனவும், அதனால் அதிமுகவிற்கு வாக்களிக்குமாறும் வளர்மதியும், அதிமுக நிர்வாகிகளும் சிரித்துக் கொண்டே அப்பெண்ணிடம் தெரிவித்தனர்.
Next Story
