1,907 கோயில்களின் திருப்பணிக்கு ரூ.225 கோடி ஒதுக்கீடு - சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு

x

சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை விவாதத்தில், அமைச்சர் சேகர்பாபு பதிலுரை வழங்கினார். தொடர்ந்து புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர், ஆயிரத்து 907 கோயில்களில், 225 கோடி ரூபாய் செலவில் இந்த ஆண்டு திருப்பணிகள் நடைபெறும் என தெரிவித்தார். பழனி ஆண்டவர் கோயில் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு எல்லா நாட்களும் 3 வேளை உணவு வழங்க முதல்வர் உத்தரவிட்டிருப்பதாக கூறிய அமைச்சர் சேகர்பாபு, இதற்காக திருக்கோயில் நிதியில் இருந்து 75 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்