IndvsPak | இந்தியா - பாக். மோதல்... பல்ஸ் எகிற மரண வெயிட்டிங்கில் பல கோடி ரசிகர்கள்

x

இந்தியா - பாக். மோதல்... பல்ஸ் எகிற மரண வெயிட்டிங்கில் பல கோடி ரசிகர்கள்

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன...

17-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதன் 6வது லீக் ஆட்டம் இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்க உள்ளது. இரு அணிகளும் இந்த தொடரின் முதல் போட்டியை வென்றுள்ளன. அதனால் இன்றைய போட்டியில் வெற்றிபெற இரு அணிகளும் போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.


Next Story

மேலும் செய்திகள்