தேசியக்கொடியை ஏற்றி வைத்து செல்பி எடுத்துக்கொண்ட யோகி ஆதித்யநாத்

x

இல்லங்களில் தேசியக்கொடி ஏற்றிய உ.பி, குஜராத் முதல்வர்கள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியக்கொடியை ஏற்றி வைத்து "ஹர் கர் திரங்கா" பிரச்சாரம் நடைபெற்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்ற அடிப்படையில், மத்திய அரசு ஹர் கர் திரங்கா Har Ghar Tiranga பிரச்சாரத்தை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. வரும் 15ம் தேதி நாட்டின் சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோவில் உள்ள தனது இல்லத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து செல்பி எடுத்துக்கொண்டார். இதேபோல், குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேல், காந்தி நகரில் உள்ள தனது இல்லத்தில் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் தோடா மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒரு லட்சம் தேசியக்கொடிகள் விநியோகம் செய்யப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்