சபரிமலை கோயிலுக்கு சென்ற பெண் மனு : உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த கேரள இளம்பெண் கனகதுர்க்கா, உச்சநீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சபரிமலை கோயிலுக்கு சென்ற பெண் மனு : உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
Published on
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்த கேரள இளம்பெண் கனகதுர்க்கா, உச்சநீதிமன்றத்தில் போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார். கடந்த 2ஆம் தேதி, போலீஸ் பாதுகாப்புடன் சென்று பிந்து, கனகதுர்க்கா இருவரும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் தரிசனம் செய்தனர். இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வீட்டிற்கு சென்ற கனகதுர்காவை, அவரது மாமியாரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு, உச்சநீதிமன்றத்தில் கனகதுர்க்கா மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நாளை, விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com