இந்த முறை கணிசமாக குறையும் நீட் கட்-ஆஃப்?
நீட் - தரவரிசை மதிப்பெண் கணிசமாக குறைய வாய்ப்பு?
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வில் மதிப்பெண்கள் சரிந்து இருப்பதால், தரவரிசை மதிப்பெண்கள் அனைத்து பிரிவினருக்கும் கணிசமாக குறையும் என கல்வியாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முடிவுகள் குறித்து ஆய்வு செய்துள்ள அவர், பி சி பிரிவு மாணவர்களுக்கு 495 முதல் 500 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார் . மேலும், பி.சி., இஸ்லாமியர் பிரிவை பொறுத்தவரை 487 முதல் 492 மதிப்பெண் எடுத்தவர்களுக்கும்,எம் பி சி பிரிவில் 480 முதல் 485 மதிப்பெண்கள் வரை எடுத்தவர்களுக்கு சீட் கிடைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார் . பட்டியலின பிரிவினருக்கு, 430 முதல் 435 மதிப்பெண் எடுத்தவர்களுக்கும், அருந்தியர் பிரிவில் 370 முதல் 375 மதிப்பெண்கள் எடுத்தவர்களுக்கே சீட் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
