"கடனை பெற்றுக் கொண்டு சொத்தை விடுவியுங்கள்" - மத்திய அரசுக்கு விஜய்மல்லையா கோரிக்கை

வங்கிகளில் தான் பெற்ற கடனை திரும்ப பெற்றுக்கொண்டு முடக்கி வைத்துள்ள தனது சொத்துகளை விடுவிக்க வேண்டும் என பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா கேட்டுக்கொண்டுள்ளார்.
"கடனை பெற்றுக் கொண்டு சொத்தை விடுவியுங்கள்" - மத்திய அரசுக்கு விஜய்மல்லையா கோரிக்கை
Published on

பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா, வங்கிகளில் பெற்ற கடன் வட்டியுடன் 12 ஆயிரம் கோடிக்கும் மேல் நிலுவையில் உள்ளது. கடனை திருப்பி செலுத்தாத விஜய்மல்லையா, லண்டனில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், வங்கிகளில் தான் பெற்ற 100 சதவீத கடனை திரும்ப பெற்றுக் கொண்டு அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ள தனது சொத்துகளை விடுவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு விஜய்மல்லையா கோரிக்கை விடுத்துள்ளார். தனது டுவிட்டரில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், இந்த விவகாரத்தில் நிதி அமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முழு அடைப்பால், தனது பல ஆலைகளின் செயல்பாடு முற்றிலும் முடங்கியிருப்பதாகவும், பணி இல்லையென்றாலும், தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்கி வருவதாகவும் விஜய்மல்லையா குறிப்பிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com