உத்தரபிரதேச மாநிலம் புலாந்த்ஷர் அருகேயுள்ள கோலூர் அரசுப் பள்ளியில், வகுப்பறைக்குள் பசு மாடுகள் கட்டப்பட்டுள்ளதால், மாணவர்கள் அனைவரும் வெளியில் அமர்ந்து படிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. பசுமாடுகள் கட்டப்பட்டுள்ளதால், வகுப்பறைகளில் குப்பைகள் சேர்ந்துள்ளன. எனினும் அவற்றை பள்ளிக்கு வெளியில் அழைத்துச் செல்ல கிராம வாசிகள் மறுப்பதாக தெரிகிறது. இதனால், மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே அமரவைத்து ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் மறுப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.