உத்திரபிரதேசம் - அயோத்தியா கான்ட்..படுக்கையில் பெண்... மின்விசிறியில் மாப்பிள்ளை...
கல்யாணமான குஷியில் குத்தாட்டம் போடும் இந்த புதுமாப்பிள்ளையும் மணப்பெண்ணும் தற்போது உயிருடன் இல்லை...
முதலிரவுக்கு சென்ற புதுமண ஜோடி படுக்கையறையில் சடலமாக கிடந்திருக்கிறார்கள்...
மனைவி படுக்கையில் இறந்து கிடக்க, கணவன் மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கியபடி கிடந்திருக்கிறார்.
ப்ரீத்....
திருமண சந்தோஷம் 12 மணி நேரம் கூட நீடிக்கவில்லை... கல்யாண வீடே சாவு வீடாக மாறி சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது...
ப்ரீத்....
ஆனந்த கண்ணீர் வழிந்த கண்களில் சோகம் வழிய, அட்சதை போட்ட அத்தனை கைகளும் வாய்க்கரசி போட தயாரானது....
ப்ரீத்....
ஊரையே துக்கத்தில் ஆழ்த்திய இந்த துயரம் நடந்த இடம் உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியா கான்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாதத் கஞ்ச் பகுதியில். இந்த ஊரைச்சேர்ந்தவர் 24 வயதான பிரதீப். டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்திருக்கிறார். இவருக்கு கடந்த சனிக்கிழமை அன்று டெல்லி லோகா மன்டியை சேர்ந்த 22 வயதான ஷிவானி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கிறது.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கோலாகலமாக நடந்த திருமணத்தை பார்த்து ஊரே வாயடைத்து போயிருக்கிறது. திருமணச்சடங்குகளை முடித்த மணமகன் வீட்டார், புதுமன தம்பதியை வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.
இரவு 9 மணிக்கு மணமக்கள் இருவரும் முதலிரவு அறைக்குள் நுழைந்திருக்கிறார்கள். ஆனால் மறு நாள் காலை 7 மணியாகியும் கதவு திறக்கப்படவில்லை. உறவினர்கள் கதவை தட்டியும் திறக்கவில்லை. இருவரும் செல்போனை எடுக்கவில்லை. இதனால் பயந்து போனவர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்திருக்கிறார்கள்.
அப்போது தான் அவர்களுக்கு காத்திருந்தது பெரும் அதிர்ச்சி. ஷிவானி கட்டிலில் மூச்சு பேச்சின்றி கிடக்க, பிரதீப் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்துள்ளார். இருவரும் இறந்ததை உறுதி செய்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
தகவல் அறிந்து தடயவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முதலிரவு அறையை சோதனை செய்திருக்கிறார்கள். இருவரின் சடலத்தை ஆய்வு செய்ததில் அந்த பகீர் உண்மை தெரிந்திருக்கிறது.
கட்டிலில் படுத்திருந்த ஷிவானியின் வாயை பொத்தி, அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, பின் பிரதீப் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என உறுதி செய்தனர்.
ஆனால் மணமக்கள் இருவரும் சந்தோஷமாகவே இந்த திருமணத்தை செய்து கொண்டதாகவும், திருமணச்சடங்கில் கூட இருவரும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டதாகவும் உறவினர்கள் கூறி இருக்கிறார்கள்.
பின் எப்படி ஒரு இரவில் இப்படி ஒரு பயங்கரத்தை பிரதீப் செய்திருக்க முடியும் அதற்கான காரணம் என்ன என போலீசார் புரியாமல் விக்கித்து நிற்கிறார்கள்.
திருமணத்திற்கு முன் இருவரில் யாரேனும் ஒருவருக்கு வேறு ஒருவரோடு ஏதேனும் தொடர்பு இருந்திருக்கலாம் எனவும் அதை தெரிந்து கொண்ட ஆத்திரத்தில் இப்படி ஒரு பயங்கரம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். ஆனால் ஷிவானிக்கும், பிரதீப்புக்கும் அப்படி எந்த உறவும் இருந்ததில்லை என்று குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது,.
எனவே இது திருமணத்திற்கு முந்தைய உறவுகள் தொடர்பான பிரச்சனையா? காதல் விவகாரமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என இரு தரப்பு பெற்றோரிடமும் போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணைக்கு பிறகே முதலிரவு அறையில் அரங்கேறிய மர்மம் விலகும்.
