நினைவாற்றலில் அசத்தும் 2 வயது சிறுவன் : இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்

உத்தரபிரதேச மாநிலம், பிருந்தாவன் நகரைச் சேர்ந்த குரு உபாத்யாயா என்கிற 2 வயது சிறுவன் 60 நாடுகளின் பெயர்களைச் சொல்லி அசத்துவதுடன், அந்த நாடுகளின் கொடிகளையும் அடையாளம் காட்டி ஆச்சர்யப் படுத்துகிறான்.
நினைவாற்றலில் அசத்தும் 2 வயது சிறுவன் : இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம்
Published on
உத்தரபிரதேச மாநிலம், பிருந்தாவன் நகரைச் சேர்ந்த குரு உபாத்யாயா என்கிற 2 வயது சிறுவன் 60 நாடுகளின் பெயர்களைச் சொல்லி அசத்துவதுடன், அந்த நாடுகளின் கொடிகளையும் அடையாளம் காட்டி ஆச்சர்யப் படுத்துகிறான். இதுதவிர ஆட்சிப் பணித் தேர்வுக்கு கேட்கப்படும் 35 கேள்விகளுக்கான பதில்களையும் சொல்லி அசத்துவதால், உள்ளூர் மக்கள் இவனை கூகுள் குரு என்று செல்லமாக அழைக்கத் தொடங்கியுள்ளனர். 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் பிறந்த இந்த சிறுவன் தற்போது இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளான்.
X

Thanthi TV
www.thanthitv.com