Rajasthan | "தகுதியற்றவர்கள்.." - முஸ்லிம் பெண்களை வெளியேற்றிய பாஜக தலைவர் - தீயாய் பரவும் வீடியோ

"தகுதியற்றவர்கள்.." -

"தகுதியற்றவர்கள்.." - முஸ்லிம் பெண்களை வெளியேற்றிய பாஜக தலைவர் - தீயாய் பரவும் சர்ச்சை வீடியோ #Rajasthan #thanthitv #viralvideo ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க்-சவாய் மாதோபூர் பகுதியில், முஸ்லிம் பெண்களுக்கு போர்வைகளை விநியோகிக்க மறுத்த பாஜக முன்னாள் எம்பியின் செயல் சர்ச்சையை ஏற்படுத்திள்ளது. அந்த பகுதியின் முன்னாள் பாஜக எம்பி சுக்பீர் சிங், தனது சொந்த செலவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவியாக போர்வைகளை வழங்கியதாக கூறப்படுகிறது. அப்போது பிரதமர் மோடியை நிந்திக்கும் முஸ்லிம்கள் போர்வைகளை பெற தகுதியற்றவர்கள் என்று தெரிவித்து, அங்கிருந்த முஸ்லிம் பெண்களை வெளியேறுமாறு கூறிய வீடியோ இணையத்தில் தீவிரமாக பகிரப்பட்டு வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com