"மரங்களை வெட்டாத மாற்றுவழி உள்ளதா?" - நேரில் ஆஜராகி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

4வது ரயில்வழிச் சாலை ஏற்படுத்த திட்டம்
"மரங்களை வெட்டாத மாற்றுவழி உள்ளதா?" - நேரில் ஆஜராகி பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
Published on

டெல்லி- மதுரா இடையே 4-ஆவது ரயில் பாதை அமைக்க மரங்களை வெட்டுவதா? என வடக்கு ரயில்வேயிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி - மதுரா இடையிலான தாஜ் பகுதி சரிவக மண்டலமாக குறிக்கப்பட்டுள்ளது. இந்த வழித் தடத்தில் ரயில்களின் நெரிசல் அதிகமானதால் நான்காவது வழித் தடத்தை உருவாக்க வடக்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதில், தாஜ் சரிவகம் மண்டலத்தில் உள்ள மரங்களை வெட்ட அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில், குறைந்த மரங்களை வெட்டும் வகையில், மாற்று வழி இல்லையா? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இது குறித்து நாளை ஆஜராகுமாறு வடக்கு ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com