அட்வென்சர்க்கு ஆசைப்பட்டு ஆபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - தீவிர முயற்சியில் மீட்பு படையினர்

தெலங்கானா மாநிலம் முலுகு அருகே முத்யாலா தாரா நீர்வீழ்ச்சி பகுதியில் சிக்கி கொண்ட 40க்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகளை மீட்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கனமழை காரணமாக நீர்வீழ்ச்சியில் அதிக தண்ணீர் கொட்டுவதாலும் காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதாலும் அங்கு இருசக்கரவாகனங்கள் மற்றும் கார்களில் சென்ற சுற்றுலாப்பயணிகள் திரும்ப முடியாமல் சிக்கி கொண்டனர். அவர்களை காப்பாற்ற தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.  

X

Thanthi TV
www.thanthitv.com