

நடப்பாண்டு நீட் தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த 45 ஆயிரம் பேர் குறைந்த பட்ச தகுதி மதிப்பெண்களை பெற்றது மட்டுமில்லாது, அதிக மதிப்பெண்களையும் வாங்கியுள்ளனர். இதையடுத்து, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களுக்கு 2016- ல் 251 ஆக இருந்த கட்-ஆப் மதிப்பெண், தற்போது 345 ஆகவும், பிற்படுத்தப்பட்ட பிரிவு மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண், 311 -ல் இருந்து, 402 ஆகவும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
கட்ஆப் மதிப்பெண் குறித்த அதிகாரப்பூர்வ தகவல், இன்று மாலையோ அல்லது நாளையோ வெளியாகும் என கூறப்படும் நிலையில், அடுத்தாண்டு கட்-ஆப் மதிப்பெண் மேலும் உயரலாம் என்று கல்வியாளர்கள் கூறுகின்றனர்.