Tirupati Temple | திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிரம்ஸ் சிவமணி சாமி தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், டிரம்ஸ் சிவமணி சாமி தரிசனம் செய்தார். நடிகர் மோகன் பாபு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருப்பதி சென்ற நிலையில், அவர் ஏழுமலையானை தரிசித்தார்.
அங்கு ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ஸ் சிவமணி, தனது வாழ்க்கை வரலாற்றை திரைப்படம் எடுக்க திரைக்கதை எழுதி வருவதாக தெரிவித்தார்.
Next Story
