சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோவில் 12 மணி நேரம் நடை அடைப்பு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், நாளை நடைபெற இருக்கும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு 12 மணி நேரம் கோவில் நடை அடைக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. நாளை இரவு 9.50 மணி முதல் மறுநாள் அதிகாலை 3.30 மணி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. அதன் காரணமாக 6 மணி நேரத்திற்கு முன்னதாகவே மாலை 3:30 மணி அளவில் கோவில் நடை அடைக்கவுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இந்த சந்திர கிரகமானது அதிகாலை 3:30 மணி வரை நீடித்திருக்கும் நிலையில், மறுநாள் காலை 6 மணி வரை 12 மணி நேரம் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கபடமாட்டார்கள் எனவும் கோவிலில் உள்ள அனைத்து விதமான சேவைகளும், விஐபி தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
