Kerala | கூண்டில் சிக்கி வெறி பிடித்து உறுமிய புலி... நடுங்கவிடும் திக் திக் வீடியோ
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே வீட்டு விலங்குகளை வேட்டையாடிய புலி, கூண்டில் சிக்கியதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். வடசேரி கும்பலா பகுதியில் செல்லப் பிராணிகளை புலி வேட்டையாடியதுடன், பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது. இதனால், அதன் வழித்தடத்தைக் குறி வைத்து வனத்துறையினர் வைத்த கூண்டில் புலி சிக்கியது. இதையடுத்து அந்த புலியை அடர்ந்த வனப்பகுதியில், விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
Next Story
