பாகிஸ்தானில் சிதறிய லஷ்கர் அமைப்பின் மூளை.. அறிவித்த இந்தியா - யார் இந்த ரஸாவுல்லா நிஜாமனி?

x

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ரஸாவுல்லா நிஜாமனி காலித் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ரஸாவுல்லா நிஜாமனி மகாராஷ்டிரா மாநிலம், நாகபுரியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் மீது கடந்த 2006-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் முயற்சிக்கு மூளையாக செயல்பட்டவர்.

மேலும், உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூரில் கடந்த 2008-ல் சிஆர்பிஎஃப் முகாம் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 7 வீரர்களும், பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு முக்கிய பங்காற்றியவர் ரஸாவுல்லா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசால் தேடப்படும் பயங்கரவாதியான இவருக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்