bihar | alchohol பெட்டி பெட்டியாக சரக்குடன் சரிந்த லாரி ஒடிவந்து அள்ளிய மக்கள்
பெட்டி பெட்டியாக சரக்குடன் சரிந்த லாரி ஒடிவந்து அள்ளிய மக்கள்
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில், மதுபானங்களை ஏற்றிச் சென்ற மினி லாரி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, சாலையில் சிதறிய மதுபாட்டில்களை பொதுமக்கள் போட்டி போட்டு எடுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்ஹத் டோல் பிளாசா அருகே நடந்த இந்த விபத்தில், லாரி ஓட்டுநரும் கிளீனரும் தப்பியோடியதாக கூறப்படுகிறது. பீகாரில் 2016-ம் ஆண்டு முதல் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில், மதுபானங்கள் ரகசியமாக கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் மதுபாட்டில்கள் மற்றும் பெட்டிகளை எடுத்துச் சென்றனர். தகவலறிந்து வந்த போலீசார் லாரியையும், மீதமிருந்த மதுபானங்களையும் பறிமுதல் செய்து, மதுபாட்டில்களை எடுத்துச் சென்றவர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
