ரயில்வே தண்டவாளத்தில் பேரதிர்ச்சி... விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்

உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டத்தில் உள்ள ரகுராஜ் சிங் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் மணல் குவியல் கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.. நல்ல வேளையாக லோகோ பைலட்டுகள் இதை முன்கூட்டியே கண்டுபிடித்த நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது... மணற்குவியலை அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்தினர்.. மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி ஓட்டுநர் ஒருவர் ரயில் பாதையில் கொஞ்சம் மணலை வீசிவிட்டு தப்பி ஓடியதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது..

X

Thanthi TV
www.thanthitv.com