Telangana | ஆற்றில் குளிக்க சென்ற 5 பேர் நீரில் மூழ்கி பலி - தெலுங்கானாவில் துயர சம்பவம்
Telangana | ஆற்றில் குளிக்க சென்ற 5 பேர் நீரில் மூழ்கி பலி - தெலுங்கானாவில் துயர சம்பவம்
தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் கோதாவரி ஆற்றில் குளிக்க சென்ற ஹைதராபாத்தை சேர்ந்த ஐந்து பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பாஷரா அருகே உள்ள கோதாவரி நதிக்கு ஹைதராபாத்தை சேர்ந்த ஐந்து நண்பர்கள் குளிக்க சென்றதாக தெரிகிறது. அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அவர்கள் ஐந்து பேரும் நீச்சல் தெரியாத நிலையில் நீரில் மூழ்கியுள்ளனர்.
பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மீட்பு குழுவினர் உதவியுடன் ஐந்து பேரையும் சடலங்களாக மீட்டனர்.
Next Story
