தூய்மை இந்தியா திட்டத்திற்காக மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருது

இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்காவின் பில்கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் உயரிய விருது வழங்கப்பட உள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்திற்காக மோடிக்கு அமெரிக்காவின் உயரிய விருது
Published on

பொது மக்களின் ஆரோக்கியம் மற்றும் சுகாதார மேம்பாட்டிற்காக ‛துாய்மை இந்தியா' திட்டத்தை, கடந்த 2014ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். அனைத்து மக்களுக்கும் கழிப்பிட வசதி செய்து கொடுப்பது, கிராமங்கள் மற்றும் நகரங்களை துாய்மையாக பராமரிப்பது போன்றவை இந்த திட்டத்தின் நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு, அமெரிக்காவின் உயரிய விருது வழங்கப்பட உள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவன அதிபரான பில்கேட்ஸின், 'பில் - மெலின்டா கேட்ஸ்' தொண்டு நிறுவனம் இந்த விருதை வழங்க உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடிக்கு, அங்கு விருது வழங்கப்பட உள்ளது. இதனை பிரதமர் அலுவலகத்தின் இணை அமைச்சர் ஜித்தேந்திரா சிங், டுவிட்டரில் உறுதி செய்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com