கடைக்கு சென்ற 10 வயது சிறுமியை துரத்திய தெருநாய்கள் - பதைபதைக்கும் காட்சிகள்
மத்திய பிரதேசத்தில் 10 வயது சிறுமியை தெருநாய்கள் தாக்க முற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டம் கார்ஹி டவுன் பகுதியில் கடைக்கு மளிகை பொருட்கள் வாங்க சென்ற 10 வயது சிறுமியை அந்த பகுதியில் இருந்த தெரு நாய்கள் சூழ்ந்து கொண்டு தாக்க முயன்றது. நாய்களுக்கு பயந்து ஓடிய அந்த சிறுமி தடுமாறி கிழே விழுந்து கூச்சலிட்டார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் நாய்களை விரட்டி அடித்து சிறுமியை காப்பாற்றினர்.
Next Story
