கூலித் தொழிலாளி மகனுக்கு மருத்துவ படிப்பில் சேர இடம் - குடும்பத்தினர் மகிழ்ச்சி

சென்னையில் கூலித் தொழிலாளியின் மகன் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளதால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கூலித் தொழிலாளி மகனுக்கு மருத்துவ படிப்பில் சேர இடம் - குடும்பத்தினர் மகிழ்ச்சி
Published on

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி சேகர். இவரது மகன் ஜெயசரண் ப்ளஸ் 2வில் 1157 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். தொடர்ந்து நீட் தேர்வு எழுதிய ஜெயசரண், 416 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியும் பெற்றார்.

கலந்தாய்வில் ஜெயசரணுக்கு வேலூர் அரசு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தது. ஏழ்மையான சூழ்நிலையில் இருந்து மருத்துவ படிப்பிற்கு தேர்வானதால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com