டெல்லியில் அடுத்தடுத்து அதிர்ச்சி.. பீதியில் மக்கள்

x

டெல்லியில் தொடர்ச்சியாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் பீதியை ஏற்படுத்தியது. டெல்லி பிரசாத் நகர், துவாரகா 5-ஆவது செக்டரில் உள்ள 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி வளாகத்தில் போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் குவிந்தனர். தலைநகர் டெல்லியில் புதன்கிழமை 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே பாணியில் இ-மெயில் வந்ததால் மாணவர்களின் பெற்றோர் பீதியடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்