160 பேருடன் புறப்பட்ட Air India விமானத்தில் அதிர்ச்சி
டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், பயணம் ஒத்திவைக்கப்பட்டது. 160 பேருடன் திங்கள்கிழமை மாலை அந்த விமானம் புறப்பட்டு ஓடுபாதையில் சென்றபோது, தொழில்நுட்பக் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பயணம் ஒத்தி வைக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர். தொழில் நுட்பக் கோளாறை சரிசெய்யும் வேலையில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
Next Story
