திருநங்கையாக அடையாளத்தை மாற்றி வங்கதேச நபர் செய்த அதிர்ச்சி
இந்தியாவில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... வங்கதேச நாட்டில் இருந்து சட்ட விரோதமாக குடியேறிய அப்துல் கலாம் என்பவர் தனது பெயரை நேஹா என மாற்றி திருநங்கை போல வெளி சமூகத்திற்கு காட்டிக்கொண்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசித்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது... அவர் உண்மையிலேயே திருநங்கை தானா அல்லது கைது நடவடிக்கையை தவிர்க்க இவ்வாறு நடிக்கிறாரா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது... தனது 10 வயதில் இந்தியாவிற்கு வந்த அவர், மத்திய பிரதேசத்தில் குடியேறும் முன் 20 ஆண்டுகள் மும்பையில் வசித்து வந்துள்ளார். உள்ளூர் ஏஜென்ட்களின் உதவியுடன் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பெற்றுள்ளார்... அவர் போலி இந்திய பாஸ்போர்ட்டின் மூலம் வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் சென்று வந்துள்ளார். மேலும் அப்துல் கலாமுக்கு போலி ஆவணங்கள் கிடைக்க உதவிய 2 பேரும் போலீசில் பிடிபட்டுள்ளனர்.
