பாலியல் தொல்லை - கொடுமை தாங்காமல் தற்கொலைக்கு முயன்ற பெண்

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் முகநூல் மூலம் பழக்கமான இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
பாலியல் தொல்லை - கொடுமை தாங்காமல் தற்கொலைக்கு முயன்ற பெண்
Published on
ராயதுர்கம் நகரை சேர்ந்த பெண்ணுக்கு திருமணம் ஆகி, ஒரு குழந்தை உள்ளது. இவருக்கும், மகேஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நட்பாக மாறிய நிலையில் முகநூல் மூலமாக பவன் , மல்லிகார்ஜுன, ஷாருக் ஆகிய மூன்று பேர் தனித்தனியாக அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளனர். இதன் மூலம், செல்போன் எண்ணை பெற்ற 3 பேரும், மகேஷ் உடனான பழக்கத்தை வெளியே சொல்லி விடுவதாக கூறி பெண்ணை மிரட்டி வந்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக மகேஷ் உள்ளிட்ட 4 பேரும், மிரட்டியே பாலியல் கொடுமை செய்துள்ளனர். இந்நிலையில் கொடுமை தாங்காமல் அப்பெண் தற்கொலைக்கு முயன்றதை கண்ட கணவன் வீட்டார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் குறித்து தெரிய வந்தது. உடனே போலீசார், மகேஷ், பவன் , மல்லிகார்ஜுன, ஷாருக் ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com